shadow

லண்டன் பேயாக த்ரிஷா நடிக்கும் ‘மோகினி’
trishaa
த்ரிஷாவின் ‘கொடி’ மற்றும் ‘நாயகி’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது புதியதாக பேய்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் நடித்த ‘மதுர’ படத்தை இயக்கிய மாதேஷ் இயக்கும் இந்த படத்தை லட்சுமண் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவின் ‘சிங்கம் 2’ படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் இந்த படத்திற்கு மோகினி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான இந்த படத்தை மொத்தம் 58 நாட்களில் படமாக்க உள்ளதாகவும் அதில் 38 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘அரண்மனை 2’ படத்தில் ஏற்கனவே பேயாக நடித்து கலக்கிய த்ரிஷா மீண்டும் லண்டன் பேயாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகி’க்காக த்ரிஷா பாடும் முதல் பாட்டு

Leave a Reply