Chennai Today News

ரஜினி படத்தில் த்ரிஷா கெட்டப்: இணையதளங்களில் வைரல்

ரஜினி படத்தில் த்ரிஷா கெட்டப்: இணையதளங்களில் வைரல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் நாயகியாக ஏற்கனவே சிம்ரன் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை த்ரிஷாவும் இந்த படத்தில் இணைந்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் இணையதளங்களில் இந்த படத்தில் த்ரிஷாவின் கெட்டப் குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. த்ரிஷா இந்த படத்தில் முடியை கட் செய்து வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார்.
ஒரு பெண் தனது முடியை கட் செய்தால் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!