trisha clean 4 பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் நடிகை த்ரிஷா.

நேற்று சென்னை தாம்பரம் அருகேயுள்ள விலங்குகள் நல மையம் ஒன்றுக்கு தனது குழுவினர்களுடன் சென்ற த்ரிஷா காலை முதல் மாலை வரை அந்த பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மேலும், அவர் தனது நண்பர்களான விஷால், ஜீவா, ஜெயம் ரவி மற்றும் சி.சி.எல். நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூய்மை இந்தியாவில் சேர்ந்து சேவை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். த்ரிஷாவின் வேண்டுகோளை ஏற்று விஷால், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் விரைவில் துடைப்பத்துடன் தெருவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கத்தி நாயகி சமந்தா ஐதராபாத்தில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள குப்பைகளை துடைப்பத்துடன் சென்று சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

trisha clean 3

trisha clean 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *