shadow

விக்ரம்-ஹரியின் ‘சாமி 2’ படத்தில் மீண்டும் இணையும் த்ரிஷா

இயக்குனர் ஹரி இயக்கிய ‘சி3’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து கொண்டிருக்கும் நிலையில் மிக விரைவில் அவர் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். இந்த படத்தில் சியான் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் நிலையில் இப்படத்தின் தாநாயகியாக நடிகர் த்ரிஷா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் ‘சாமி 2’ தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் அவர்களும் இந்த தகவலை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான ‘சாமி’ திரைபபடத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் ‘சாமி 2’ திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தில் லஞ்சம் வாங்காத நேர்மையான காவல்துறை அதிகாரியாக சியான் விக்ரம் நடித்திருந்தார்.

ஆக்சன், விறுவிறுப்பு ஆகியவை கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் தொடங்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகி கேரக்டர் இருப்பதாகவும், அந்த நடிகையின் தேர்வு மிகவிரைவில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply