shadow

ஒரே படத்தில் த்ரிஷா-ரம்யா நம்பீசன்

கோலிவுட் திரையுலகின் சீனியர் நடிகை த்ரிஷாவும், வளர்ந்து வரும் நடிகை ரம்யா நம்பீசனும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். ஆனால் இவர்கள் இணைந்து நடிக்கவில்லை என்பதும், த்ரிஷாவுக்காக ரம்யா நம்பீசன் குரல் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல காமெடி நடிகர் மனோபாலா தயாரிப்பில் உருவாகி வரும் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் த்ரிஷா, குழந்தைகளுடன் இணணந்து பாட்டு பாடுவதாக ஒரு காட்சி வருகிறது.

இந்த பாடலை த்ரிஷாவுக்காக பாடியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். ரம்யா ஏற்கனவே பல தமிழ், மற்றும் மலையாள பாடல்களை பாடியுள்ள போதிலும், த்ரிஷாவுக்காக முதல்முதலில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிர்மல் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர்.

Leave a Reply