kamal and trishaஒரு படத்தை ரீமேக் செய்யும் போது நடிகர் நடித்த முக்கிய வேடத்தை நடிகை ஏற்று நடிப்பது, நடிகை நடித்த முக்கிய வேடத்தை நடிகர் நடிப்பதும் தற்போது டிரெண்டாக உருவாகி வருகிறது. சமீபத்தில் மெளனகுரு’ படத்தில் நடித்த அருள்நிதி கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதேபோல் தற்போது கமல் நடித்த முக்கிய வேடம் ஒன்றை நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் இருவேடங்களில் நடித்து கடந்த 1979ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படமான கல்யாணராமன் திரைப்படம் தற்போது ரீமேக் ஆகவுள்ளது. இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று கேரக்டரை மாற்று அந்த கேரக்டரில் த்ரிஷா நடிக்கவுள்ள செய்திகள் கூறுகின்றன.  மாற்றுத்திறனாளி மற்றும் மாடர்ன் பெண் என இரு வேடங்களில் த்ரிஷா நடிக்கவுள்ளார்.

த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும், இந்த படம் வரும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *