shadow

அரசு அதிகாரிகள் ஜீன்ஸ், டீசர்ட் அணிய தடை:

அரசு அதிகாரிகள் பணி நேரங்களில், ஜீன்ஸ் பேன்ட், டீசர்ட், கூலிங் கிளாஸ்’ ஆகியவை அணிந்து பணிபுரிய கூடாது என திரிபுரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அம்மாநில அரசு அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில முதன்மை செயலர், சுஷில் குமார் நேற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பணி நேரத்தில், அரசு அதிகாரிகள், டி – ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக புகார்கள் வந்தன. அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும், ஏராளமான அரசு அதிகாரிகள், மொபைல் போன்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் புகார்கள் வந்தன. எனவே ஆலோசனைக் கூட்டங்களின் போது, மொபைல் போன்களை, அதிகாரிகள், ‘சுவிட்ச் ஆப்’ செய்ய வேண்டும்; இதை, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply