கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை: திருச்சி சிவா

சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் இந்திய அரசின் துணையுடன் தான் வெற்றி கண்டோம் என்று கூறியது காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

மேலும் இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு பிரபாகரன் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் கருணாநிதி அந்த கடிதத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் துணண முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ‘இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை என தெரிவித்துள்ளார்.

உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஈழப் பிரச்சினையில் 1956ஆம் ஆண்டு முதல் அக்கறை காட்டி வந்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *