3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியா-இலங்கை இன்று மோதல்

இலங்கை, இந்தியா, மற்றும் வங்கதேசம் என மூன்று நாடுகள் மோதும் டி20 போட்டி தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதன்படி முதல் ஆட்டம் இன்று இந்தியா-இலங்கை அணிகள் இடையே கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் கோஹ்லி, தோனி, உள்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர், விஜய் சுந்தர், ரிஷாப் பான்ட் உள்ளிட்ட இளம் வீரர்கள் களம் காணவுள்ளனர்

இந்த போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் விபரம் பின்வருமாறு:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணைகேப்டன்), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், ரிஷாப் பான்ட்.

இலங்கை: சன்டிமால் (கேப்டன்), சுரங்கா லக்மல் (துணைகேப்டன்), உபுல் தரங்கா, குணதிலகா, குசல் மென்டிஸ், தசுன் ஷனகா, குசல் பெரேரா, திசரா பெரேரா, ஜீவன் மென்டிஸ், இஸ்ரு உதனா, அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சா, பிரதீப், சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா.

இந்த தொடரின் அட்டவணை பின்வருமாறு

மார்ச் 6: இந்தியா – இலங்கை
மார்ச் 8: இந்தியா – வங்கதேசம்
மார்ச் 10: இலங்கை – வங்கதேசம்
மார்ச் 12: இந்தியா – இலங்கை
மார்ச் 14: இந்தியா – வங்கதேசம்
மார்ச் 16: இலங்கை – வங்கதேசம்
மார்ச் 18: இறுதிப்போட்டி

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *