கோடிக்கணக்கில் சொத்து இருந்தும்…..

முட்டை வியாபாரியான டிராவல்ஸ் அதிபர்

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்த டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் தற்போது டிராவல்ஸ் அலுவலகத்தில் முட்டை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக டிராவல்ஸ் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை இதனால் டிராவல்ஸ் உரிமையாளர்கள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர் மேலும் ஒரே இடத்தில் இரண்டு மாதமாக வாகனங்கள் நின்று கொண்டிருந்ததால் வாகனங்கள் பழுதாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் டிராவல்ஸ் வாகனங்கள் எதுவும் போடாததால் செலவுக்கு காசு இல்லாத புதுவையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் தற்போது தனது டிராவல்ஸ் அலுவலகத்தை முட்டைக்கடையாக மாற்றியுள்ளார் இந்த வருமானத்தில்தான் தற்போது தனது குடும்பம் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

அவரிடம் இருக்கும் வாகனங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடியாக இருந்தாலும், தற்போது அந்த வாகனத்தில் இருந்து எந்த வருமானமும் வருவதில்லை என்பதால் அவர் முட்டை வியாபாரியாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.