shadow

இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.3000 முன்பணம் வழங்கப்படுகிறது

driverதமிழக போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் முன்பணமாக இன்று ரூ.3,000 ரூபாய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ‌

இதன்படி தமிழகம் முழுவதும் பணியாற்றும் 1 லட்சத்து 40 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.3,000 ரூபாய் கையில் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் இந்த பணம் அவர்களது சம்பளத்தில் கழித்து கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மீதி சம்பளம் வழக்கம் போல் ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏ.டி.எம் மற்றும் வங்கியில் பணம் எடுக்க முடியாத நிலையில் அரசின் இந்த அறிவிப்பால் 8 போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் உள்பட அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *