shadow

நாய், பூனையுடன் பேச மொழிபெயர்ப்பு கருவி: அமெரிக்க பேராசிரியர் தகவல்

ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்க கூகுள் டிரான்ஸ்லேட் உதவி செய்வதை போலவே நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளுடனும் மொழிபெயர்ப்பு கருவி மூலம் பேச முடியும் என்று அமெரிக்க பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர் கான்ஸ்லோபான்ட்சிகோப் என்பவர் ஒரு மொழிபெயர்ப்பு கருவியை தயாரித்து வருவதாகவும், இந்த கருவியை மிசிசிப்பி பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் நாய்களுக்கு பொருத்தி பரிசோதனை முறையில் ஆய்வு செய்து வருவதாகவும், அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் இன்னும் 10 ஆண்டுகளில் நாய்களுடன் பேச முடியும் என அவர் தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply