shadow

 M_Id_409780_Indian_Railwaysஇன்று முதல் இந்தியா முழுவதும் ரயில் கட்டணம்  உயருகிறது. இந்திய ரயில்வே துறை புதிய கட்டண விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.

புறநகர் ரயிலில் 80 கிலோ மீட்டர் வரையுள்ள கட்டணத்தில் மாற்றம் இல்லை. புறநகர் ரயிலில் 85 ரூபாயாக இருந்த ‘சீசன்’ டிக்கெட் கட்டணம் ரூ.150 ஆக உயர்த்தி முதலில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த குறைந்தபட்ச கட்டணம் நேற்று ரூ.100 ஆக குறைக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிக்கு சீசன் டிக்கெட் கட்டணத்திலும் மாற்றம் இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

80 கிலோ மீட்டருக்கு மேல் 14.2 சதவீத கட்டண உயர்வு இருக்கும். புறநகர் ரயிலில் ஏற்கனவே சீசன் டிக்கெட் எடுத்தவர் அந்தந்த சீசன் டிக்கெட்டின் காலம் முடியும்வரை அதே கட்டணத்தில் பயணம் செய்யலாம். புதிதாக எடுக்கப்படும் சீசன் டிக்கெட்டுக்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு பொருந்தும்.

புறநகர் ரயில் கட்டணம் உயர்வை ரத்து செய்ததால் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாகவே இந்த கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

12

 

Leave a Reply