shadow

indian-railways copyவரும் 21ஆம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 20ஆம் தேதி முதல் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்த கட்டண உயர்வு அறிவிப்பு அதிரடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வெ அமைச்சர் மல்லிகார்ஜுனே கார்கே, சரக்கு ரயில் கட்டணம் உள்பட பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் முடிந்து வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது.

பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் ரயில்வே கட்டணம் உயர்த்துவதற்கு மோடியின் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக இன்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை ரயில்வே அமைச்சகம் இரவோடு இரவாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply