சென்னை மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் பரிதாப பலி

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார விரைவு ரெயில் ஒன்று, இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் ரயிலுக்குள் செல்ல முடியாமல் ஒருசிலர் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்தனர்.

இந்த நிலையில், பரங்கிமலை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, படிக்கட்டில் தொங்கிகொண்டிருந்தவர்கள் பக்கவாட்டில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 7 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துகு படிக்கட்டில் பயணம் செய்ததே காரணம் என்றும், படிக்கட்டில் பயணம் செய்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும் ரயில்வே துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், தடுப்புச்சுவரை அகற்றும் வரை இந்த பாதையில் ரயில்கள் விட வேண்டாம் என்று கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *