shadow

ஆன்லைன் பரிவர்த்தனையை அதிகரிக்க கிராமங்களுக்கு இலவச இண்டர்நெட். டிராய்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் பரிவர்த்தனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது டிராய் நிறுவனமும் இதுகுறித்து ஒரு பரிந்துரையை செய்துள்ளது. இதன்படி கிராம மக்களும் ஆன்லைனில் பரிவர்த்தனையை அதிகரிக்க செய்ய வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட அளவு இண்டர்நெட் டேட்டாவை அவர்களுக்கு இலவசமாக அளிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது

மேலும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய நிதியமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து தேசிய அளவிலான பயிற்சி அரங்கு ஒன்றை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது பற்றி கற்பிக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply