திமுக-காங்கிரஸ் கூட்டணி அவ்வளவுதானா? டி.ஆர்.பாலு பேட்டியால் அதிர்ச்சி

திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என கூறி கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கையால் கிட்டத்தட்ட திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து திமுக எம்பியும் திமுக முதன்மை செயலாளருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘திமுக – காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்றும், காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம் என்றும், அதனால் தான் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை திமுக பங்கேற்கவில்லை என்றும் கூறினார்.

ஏற்கனவே திமுக, அதிமுக இல்லாத மூன்றாவது அணி ஒன்றை காங்கிரஸ் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, பாமக, விசிக, கமல் கட்சி, கம்யூனிஸ்ட்கள் ஆகியவை இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply