விமான நிலைய ஓய்வறையில் ஆபாச படம். பெண்கள், குழந்தைகள் அதிர்ச்சி
lisbon
போர்சுக்கல் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்று லிஸ்பன் விமான நிலையம். இந்த விமான நிலையம் 24 மணி நேரமும் பிசியாக இருக்கும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்தின் ஓய்வு அறையில் சமீபத்தில் அதிகாலை 3 மணியளவில் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஆபாசப் படம் ஒளிபரப்பனாதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லிஸ்பன் விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த பெண்களும் குழந்தைகளும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் நீண்ட விமானப் பயணத்தில் சோர்வடைந்து ஓய்வு எடுத்த பல பயணிகள் இந்த படத்தைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்ததாகவும், இந்தக் காட்சியை ஒருசிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து லிஸ்பன் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை செய்தபோது, விமான நிலையத்தின் தொலைக்காட்சி ஆபரேட்டர் தற்செயலாக சேனலை மாற்றியதாகவும், அதில் ஒளிபரப்பான ஆபாசப் படத்தைத்தான் மக்கள் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக பயணிகள் யாரும் புகாரளிக்கவில்லை எனவும், மேற்கொண்டு இதுபோனற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=yGrNS-8IOl4

English Summary: Tourists shown porn in baggage area at Lisbon airport

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *