shadow

flight 2  வடகிழக்கு கரீபியன் தீவில் உள்ள செயிண்ட் மார்ட்டின் என்ற தீவில் சுற்றுலாப்பயணிகளின் தலைக்கு மேலே மிக அருகில் விமானம் பறந்து சென்ற காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

flight 1
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1w9rDtD” standard=”//www.youtube.com/v/JJ1W7EBjApY?fs=1″ vars=”ytid=JJ1W7EBjApY&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7129″ /]

செயிண்ட் மார்ட்டின் நகரில் உள்ள மாஹோ கடற்கரையின் அருகில் ஜூலியானா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு தினமும் பல விமானங்கள் வந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று காலை ஒரு பயணிகள் விமானம் கடற்கரையில் மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. கடற்கரையில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளின் தலைக்கு மிக அருகே அந்த விமானம் பறந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.flight 3

இந்த திடுக்கிடும் சம்பவத்தை அங்கிருந்த ஒரு சுற்றுலாப்பயணி தனது மொபைல் போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகவும் பரபரப்புடன் வெகுவேகமாக பரவி வருகிறது. நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக நாமும் அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.

flight

Leave a Reply