shadow

99 ஆண்டுகளுக்கு பின் அரிய சூரிய கிரகணம். நாசா எச்சரிக்கை

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது ஏற்படும் சூரிய கிரகணம் அவ்வப்போது அமாவாசை நாளன்று ஏற்படும் நிலையில் வரும் ஆகஸ்டு 21-ந்தேதி அடுத்த சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.

இது ஒரு அரிய சூரிய கிரகணம் என்றும், இந்த சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் என்றும் சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

மேலும் இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் வெறுங்கண்ணால் பார்க்க கூடாது என்றும் அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும் என்றும் அதிலும் 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கிரகண கண்ணாடி அணிந்தாலும் பார்க்க கூடாது என்றும் நாசா எச்சரித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் சுமார் 30 கோடி பேர் பார்க்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்றும் நாசா மேலும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply