shadow

வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு நடத்தியதன் மூலம் உலக மீடியாக்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இந்த நிலையில் தற்போது இவரது சொத்து மதிப்பு குறித்து, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் வாழ்க்கை குறித்து பெரும்பாலான தகவல்கள் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று, கிம் ஜாங் உன்னின் சொத்து மதிப்பு, எவ்வாறு பணம் கிடைக்கிறது என்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சொத்து மதிப்பு 5 முதல் 8 பில்லியன் பவுண்ட் வரை இருக்கலாம். இதில் பாதிக்கும் மேல் சட்டவிரோதமாக சம்பாதித்தவை என்றும் அதாவது போதைப் பொருள் கடத்தல், தந்தம் கடத்தல் உள்ளிட்டவை மூலம் கிடைத்தவை என்றும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிம் ஜாங் உன்னிற்கு ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. தன்னுடைய செலவை எவ்வாறு மேற்கொள்கிறார் என்று பிரபல கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் கூறியுள்ளார். அதன்படி, ஆண்டிற்கு 440 மில்லியன் பவுண்ட் செலவு செய்கிறார். அதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிக்க செலவிடுகிறார். 5 மில்லியன் பவுண்ட் மதிப்பில் கப்பல், குண்டு துளைக்காத கார், பனிச்சறுக்கு ரிசார்ட் வைத்துள்ளார். ரிசார்ட்டிற்கு மட்டும் 25 மில்லியன் பவுண்ட் செலவிடுகிறார்.

மாட்டுக்கறி மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பதால், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இவருக்கு வடகொரியா பியோங்யங் பகுதி சொகுசு வீடு முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் 1000 பேர் அமர்ந்து சினிமா பார்க்கும் தியேட்டர், 7 மில்லியன் பவுண்ட் கைக்கடிகாரம் உள்ளது.

Leave a Reply