shadow

தாறுமாறாக உயரும் தக்காளி விலை: அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஐடியா

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதை காரணமாக காட்டி வியாபாரிகள் தாறுமாறாக பொருட்களின் விலையை உயர்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது

தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில் இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ‘காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்காக கூட்டுறவு கடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தக்காளி விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு பொதுமக்கள் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐடியா தெரிவித்தார்

Leave a Reply