shadow

supreme courtசொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரி ஜெயலலிதா நாளை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் கடந்த 12 நாட்களாக சிறையில் உள்ளார்.

சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேறு நீதிபதி சந்திரசேகரய்யா அவர்களா தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பிரதான வழக்கு தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுவை அவர் வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இந்நிலையில், ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அ.தி.மு.க வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரய்யா வழங்கிய தீர்ப்பு நகலை இன்று பெற்றுக்கொண்ட அ.தி.மு.க. வழக்கறிஞர்கள்தீர்ப்பில் அவர் கூறியுள்ள அம்சங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜெயலலிதா சார்பில் புதிய ஜாமீன் மனு தயாரிக்கப்பட்டு வருவதாகவும். இந்த ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் நாளை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் இரண்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர். ஜெயலலிதா, சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஒரு மனுவும், மற்றொன்று கடந்த 27ஆம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தற்போது லண்டனில் இருக்கும் அவர் நாளை டெல்லி வரவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply