மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: அமித்ஷா மேஜிக் பலிக்குமா?

மகாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இதற்காக இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும், அதன்பின் சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூட்டப்பட்டு அனைத்து உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும்

இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மறைமுக வாக்கெடுப்பு நடத்த கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமித்ஷாவின் மேஜிக் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply