shadow

4மேஷம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். எதிர்பாராத பயணம் உண்டு. மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5. 30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள்
ரிஷபம்
வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர் களை அதிரச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள்
மிதுனம்
இன்றையதினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உதியோகத்தில் பணிகளை விறைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள்
கடகம்
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள்
சிம்மம்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்படும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள்
கன்னி
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர் கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள்
துலாம்
மாலை 5. 30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். மாலை 5. 30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள்
தனுசு
இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

ராசி குணங்கள்
மகரம்
வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

ராசி குணங்கள்
கும்பம்
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள்
மீனம்
மாலை 5. 30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

Leave a Reply