shadow

இன்று டிசம்பர் 5, உலக எய்ட்ஸ் தினம்
aids
உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் இல்லா உலகை அமைப்போம் என இந்த நாளில் உறுதி ஏற்போம்.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம்.   எயிட்ஸ் ஆண்டு தோறும் டிசம்பர் 1 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் இந்த நாளின் நோக்கம், எய்ட்ஸ் பரவாமல் தடுத்தல், அதன் பாதிப்புகளை குறைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுதல் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

எயிட்ஸ் ஒரு உயிர் கொல்லி நோய் என்ற அச்சத்தின் மத்தியில் ஒதுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்தவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக பாவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இதனை மையமாக கொண்டு உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டு தோறும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு எய்ட்ஸ்  தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கரு பொருள் Getting to Zero என்பதாகும். அதாவது எய்ட்ஸ் இல்லா உலகம் என்பதே இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்கான கரு பொருளாகும்.

அண்மையில் யுனிசெப் எனப்படும் ஐநா சிறுவர் நிதியம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் உலகம் முழுவதும் 3 கோடியே 69 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

2000 மாவது ஆண்டிற்கு பின்னர் இந்த நோயின் தாக்கம் 35 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோயின் தாக்கம் 58 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் என்பது தொற்று வியாதி அல்ல. எச்.ஐ.வி (HIV) தொற்று உள்ளவர்களையும் சமமாக பாவிப்போம் அவர்களின் வாழ்வையும் மேம்படுத்துவோம். எச்.ஐ.வி (HIV) தொற்று இல்லா உலகம் படைப்போம்.

Leave a Reply