புதிய கட்சியை தொடங்கினார் டி.ராஜேந்தர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலை நோக்கி பயணிக்கும் நிலையில் ஏற்கனவே பல ஆண்டுகள் அரசியலில் இருந்த டி.ராஜேந்தர் தற்போது மீண்டும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

டி.ராஜேந்தர் இன்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சியின் பெயர்ப்பலகையை சற்றுமுன் அவர் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்தார்.

டி.ராஜேந்தரின் கட்சியின் பெயர் பலகையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமின்றி அவர் கடுமையாக விமர்சனம் செய்த ஜெயலலிதாவின் படமும் இடம்பெற்றுள்ளது. மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ள டி.ராஜேந்தர் கட்சிக்கு மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *