shadow

7மேஷம்
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள்
மிதுனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். கடன் தொந்தரவுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள்
சிம்மம்
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள்
கன்னி
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள்
துலாம்
இன்றைய தினம் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமாக நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள்
விருச்சிகம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள்
தனுசு
விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன் -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

ராசி குணங்கள்
மகரம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

ராசி குணங்கள்
கும்பம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள்
மீனம்
இன்றைய தினம் திருப்திகரமாக இருக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

Leave a Reply