shadow

இன்று பிளஸ் 2 தேர்வு: எந்தெந்த இணையதங்களில் பார்க்கலா?

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்கள் கடந்த மாதம் எழுதிய பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளங்களில் வெளியாகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை இயக்ககம் செய்துள்ளது

மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

Leave a Reply