பட்ஜெட் நெருங்கும் நிலையில் பெட்ரோல் விலையில் மாற்றமா?

சென்னையில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது

உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.