அடுத்த அதிபர் யார்? பாகிஸ்தானில் இன்று தேர்தல்

பாகிஸ்தான் நாட்டில் இன்று பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இன்றிரவே ஓட்டு எண்ணிக்கை துவங்கி நாளை காலைக்குள் அடுத்த அதிபர் யார் என்பது குறித்து தெரிய வரும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிறையில் இருந்த நவாசுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு அனுதாப ஓட்டு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் அவரது மகள் சிறையில் இருந்தே உருக்கமாக தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். நாட்டில் நீதி தோற்று விட்டது. நீதியை காப்பாற்ற எனது கட்சிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்’ என நவாஸ் பேசியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *