திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று கலிபோர்னியாவில் மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பிரமாண்டமான விழா ஒன்றில் 86 வது ஆஸ்கார் விருதுகள் வழங்க இருக்கின்றன.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கனமழை பெய்து வருவதால் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவுக்கு வருபவர்கள் சிரமத்தில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடக்கும் கடந்த இரண்டு நாட்களாக குவிந்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களை வரவேற்கும் வகையில் அமைக்கப்படும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் (Oscar) விருதுக்கான பரிந்துரைப்பட்டியலில் அமெரிக்கன் ஹஸ்ஸல் (American Hustle), கேப்டன் ஃபிலிப்ஸ், (Captain Phillips), கிராவிட்டி (Gravity), தி உல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட் (The Wolf of Wall Street) உட்பட 9 திரைப்படங்கள், இடம்பெற்றுள்ளன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *