shadow

modi-obama
அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்புகிறார்.

இந்திய நேரப்படி இன்று காலை 6 மணியளவில் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் நரேந்திர மோடி நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.இன்னும் சற்று நேரத்தில் அவர் புதுடெல்லி வந்தடைவார். முன்னதாக வாஷிங்டனில் தனது அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நரேந்திரெமோட், அமெரிக்காவுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக  கூறியுள்ளார்.

5 நாள் பயணத்தில் தான் நிறைய சாதித்திருப்பதாகவும், மிகுந்த திருப்தியோடு இந்தியா திரும்புவதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக, நரேந்திர மோடியும், ஒபாமாவும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா.வில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, இந்தியாவுக்கு ஐ.நா.வில் நிரந்த உறுப்பு நாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கும், அமெரிக்காவில் இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கும், அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

Leave a Reply