shadow

சென்னையில் இன்று 29 பள்ளிகளுக்கு விடுமுறை. சென்னை கலெக்டர் உத்தரவு
school
சென்னையில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இன்று பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படும் என்றும் சுத்தப்படுத்தப்படும் பணிகள் நிறைவடையாத 29 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் விபரங்கள் பின்வருமாறு:

* வில்லிவாக்கம் சிட்கோநகர் அரசு மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலப் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை, பஜார் சாலையில் உள்ள சென்னை தொடக்க பள்ளிகள்
* சைதாப்பேட்டை சென்னை உருது தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை திடீர்நகர் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

* கிண்டி லயன்ஸ் கிளப் தொடக்கப்பள்ளி
* நந்தனம் ஒய்.எம்.சி.ஏ காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி
* நந்தனம் சென்னை தொடக்க பள்ளி மற்றும் சென்னை மேல்நிலைப்பள்ளி
* சாலிகிராமம் அம்பத்தூர் அரிமா சங்க நடுநிலைப்பள்ளி
* வடபழனி புலியூர் சென்னை தொடக்கப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி
* மேற்கு மாம்பலம் சென்னை மேல்நிலைப்பள்ளி
* ஈக்காட்டுதாங்கல் சென்னை தொடக்கப்பள்ளி

* ஆயிரம் விளக்கு புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சென்னை உயர் நிலைப்பள்ளி
* சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி
* புளியந்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர் நிலைப்பள்ளி

* தரமணி சென்னை மேல்நிலைப்பள்ளி
* கோட்டூர்புரம் சென்னை தொடக்கப்பள்ளி
* அடையாறு காமராஜர் அவென்யூ சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர் நிலைப்பள்ளி

மேலும் 29 பள்ளிகளை தவிர பிற பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English Summary: Today leave for 29 schools at Chennai said Collector Sundharavalli

Leave a Reply