shadow

kargil war success dayஇந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ஊடுறுவல் படைக்கும் இடையே கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின் 15 வது வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய ராணுவம் எந்தவித சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் முழு அளவில் தயாராக உள்ளதாக ராணுவ தளபதி விக்ரம் சிங் அவர்கள் இன்றைய வெற்றி தின அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய எல்லைப்பகுதியான கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தனது ராணுவ நடவடிக்கையால் விரட்டி அடித்தது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் 527 வீரர்களை இழந்தது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் 4000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இந்த போர் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தீவிரவாதிகள் அனைவரையும் விரட்டியடித்து இந்தியா வெற்றி பெற்ற இந்த 15 வது நினைவு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நேற்று காஷ்மீரின் டிராஸ் பகுதியில் நடந்த வெற்றி தின கொண்டாட்டத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply