shadow

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு எப்போது?

இந்திய ஜனாதிபதியாக இருந்து வரும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவரது பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்தவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது வேலைகளை தொடங்கி விட்டதாகவும், இதன்படி தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, தேர்தல் தேதியை இன்று அறிவித்தால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் இன்றே அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் வெற்றியினால் பாஜகவின் பலம் கூடியுள்ளதால் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply