shadow

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல். இன்று மாலை நல்லடக்கம்.

3தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவி ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார். அவருடைய உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. பின்னர் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் ஜெயலலிதாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்திலேயே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவின் உடல் தகனம் செய்யப்படுவதற்காக எம்.ஜி.ஆர் சமாதி அருகே உள்ள இடம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தை தமிழக டிஜிபி ராஜேந்திரன் பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

Leave a Reply