ஐரோ அல்லது யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 18 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன.

*ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும். இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். ‘யூரோ’ என்னும் வார்த்தை டிசம்பர் 16,1995-ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

1999-ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002-ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002-ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.

அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும்

Leave a Reply