shadow

நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த பல வருடங்களாக கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். இளம் நடிகைகளுக்கு போட்டியாக அவர் தற்போது பிசியாக நடித்து வரும் நிலையில் இன்று அவரது இரண்டு படங்களின் புரமோஷன்களும் ஒருசில மணி நேர இடைவெளியில் வெளிவரவுள்ளது.

நயன்தாரா நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் ‘கோலமாவு கோகிலா’ ஆகிய இரண்டு படங்களின் புரமோஷன்கள் இன்று தொடங்கவுள்ளது. அதாவது இன்று மாலை 5 மணிக்கு ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் இடம்பெற்ற ‘விளம்பர இடைவெளி’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கம்போஸ் செய்துள்ளார்.

அதேபோல் இன்று மாலை 7 மணிக்கு நயன்தாரா நடித்து வரும் இன்னொரு படமான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரே நாளில் நயன்தாராவின் 2 படங்களின் புரமோஷன்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply