இன்று ஆளுனர் – தினகரன் சந்திப்பு: திருப்பம் ஏற்படுமா?

தமிழக பொருப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை தினகரன் இன்று தனது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்களுடன் இன்னும் சில நிமிடங்களில் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பிலும் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று பழைய பல்லவியை தினகரன் பாடினால் நிச்சயம் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும்.

எனவே இன்று அவர் ஆட்சிக்கு வாபஸ் என்ற கோரிக்கையை வைத்தால் மட்டுமே தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்றைய சந்திப்பிற்கு பின் என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் ‘எங்கள் தரப்பு கோரிக்கைகளை ஆளுநரிடம் கூற செல்கிறோம், நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏ புதுச்சேரியில் இருந்து சென்னை கிளம்பும் முன் பேட்டியளித்துள்ளார். இன்றைய சந்திப்பையொட்டி புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *