shadow

 5மேஷம்
இன்றையதினம் மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப்பேசும் சூழல் அமையும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வானபழுது நீங்கும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். முன்கோபம் விலகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு ஏமாற்றம் ஏற்படக்கூடும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
இன்றையதினம் மறதி, சோம்பல் வந்து நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கடகம்
இன்றையதினம் ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
இன்றையதினம் சோர்வு, அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
கன்னி
நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக் காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மன உளைச்சல் நீங்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
துலாம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றைய தினம் மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
தனுசு
புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம் விலகும். பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மகரம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
இன்றையதினம் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
மீனம்
செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக சில பிரபலங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

Leave a Reply