shadow

5abமேஷம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
கடகம்
இன்றையதினம் உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்விர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று மதத்தினரால் உதவி கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
கன்னி
முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
இன்றையதினம் பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றையதினம் தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். அம்மாவின் உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
தனுசு
இன்றையதினம் மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
மகரம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
கும்பம்
இன்றையதினம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
மீனம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப்பற்றாகுறை விலகும். மனதிற்குப்பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்து வீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பகர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

Leave a Reply