shadow

astrologyமேஷம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு, கிரே
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், வைலெட்
 
 
ராசி குணங்கள்
கடகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்தியோகத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க்
 
 
ராசி குணங்கள்
கன்னி
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேசாதீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், வெளிர் நீலம்
 
 
ராசி குணங்கள்
துலாம்
ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
உங்களின் முன்னேற்றப் பாதையை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிளிப்பச்சை
 
 
ராசி குணங்கள்
தனுசு
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ஊதா
 
 
ராசி குணங்கள்
மகரம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. முன்கோபத்தால் பகை உண்டாகும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், வெளீர்நீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
மீனம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, நீலம்

Leave a Reply