astrologyமேஷம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 
ராசி குணங்கள்
கடகம்
மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களை ஒவ்வொன்றாக சரி செய்துக் கொள்ளப்பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து மனநிறைவு கிட்டும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆதரிப்பார்கள். மதியம் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
 
 
ராசி குணங்கள்
கன்னி
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் தருவீர்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
துலாம்
மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோ£கத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
எதிர்பார்த்த வேலைகள் முடியாவிட்டாலும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை
 
 
ராசி குணங்கள்
தனுசு
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மகரம்
இன்றையதினம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தி புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை
 
 
ராசி குணங்கள்
கும்பம்
மதியம் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்துப் போகும். மதியம் 2 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *