இன்றைய ராசிபலன்கள் 28/01/2018

மேஷம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
ராசி பலன்கள்

ரிஷபம்
காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் அசதி, சோர்வு வந்து போகும். பிற்பகல் முதல் இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,பிங்க்
ராசி பலன்கள்

மிதுனம்
காலை 11.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்
ராசி பலன்கள்

கடகம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை
ராசி பலன்கள்

சிம்மம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ப்ரவுன்
ராசி பலன்கள்

கன்னி
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண்,ஆரஞ்சு
ராசி பலன்கள்

துலாம்
காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் கவனமுடன் செயல்பட பாருங்கள். பிற்பகல் முதல் கணவன்& மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே,மஞ்சள்
ராசி பலன்கள்

விருச்சிகம்
காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா
ராசி பலன்கள்

தனுசு
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,கருநீலம்
ராசி பலன்கள்

மகரம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிரே
ராசி பலன்கள்

கும்பம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,மஞ்சள்
ராசி பலன்கள்

மீனம்
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,இளஞ்சிவப்பு
ராசி பலன்கள்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *