shadow

Dina-palan

 

மேஷம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

ராசி குணங்கள் ரிஷபம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ராசி குணங்கள் மிதுனம்
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

ராசி குணங்கள் சிம்மம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

ராசி குணங்கள் கன்னி
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ராசி குணங்கள் துலாம்
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் விருச்சிகம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கம். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

ராசி குணங்கள் தனுசு
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

ராசி குணங்கள் மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் கும்பம்
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மீனம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். விருந்தினர் வருகை உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

Leave a Reply