shadow

Dina-palanமேஷம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள்
மிதுனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவுக் கூடும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள்
கடகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் புது முடிவுகளை தவிர்க்கவும். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து விலகும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள்
கன்னி
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வெளியூரிலிருந்த நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள்
துலாம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள்
தனுசு
சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள்
மகரம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயார் ஆதரித்துப் பேசுவார். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள்
மீனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெ டுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *