shadow

இன்றைய ராசிபலன்கள் 30/10/2016

astrologyமேஷம்
உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள் ரிஷபம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் மிதுனம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் கடகம்
எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ராசி குணங்கள் சிம்மம்
திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள் கன்னி
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள் துலாம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள் விருச்சிகம்
எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள் தனுசு
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள் மகரம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள் கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் மீனம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

Leave a Reply