shadow

இன்றைய ராசிபலன் 29/06/2016

astrologyமேஷம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

ராசி குணங்கள் ரிஷபம்
பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் மிதுனம்
யதார்த்தமாகப் பேசிக் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே

ராசி குணங்கள் கடகம்
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

ராசி குணங்கள் சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்&மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் கன்னி
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

ராசி குணங்கள் துலாம்
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

ராசி குணங்கள் விருச்சிகம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் தனுசு
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப் பச்சை

ராசி குணங்கள் மகரம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் கும்பம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்

ராசி குணங்கள் மீனம்
குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

Leave a Reply