shadow

 astrologyமேஷம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கன்னி
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துப் போகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
துலாம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் இருக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
தனுசு
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
மகரம்
சோர்வு நீங்கி உற்சாமடைவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
கும்பம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். தாழ்வு மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
மீனம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

Leave a Reply